விபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால், அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.
ராணிப்பேட்டை தண்டலம் அடுத்த வள்ளலார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு (24). இவர், கடந்த 24.10.2016 அன்று இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய போது, ரத்தினகிரி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் அணுகு சாலையில் வந்த போது,  அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து மோதியதில் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக, ராணிப்பேட்டை நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. விபத்தில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் ரூ.7 லட் சத்து 70 ஆயிரத்து 50-ஐ வட்டியுடன் வழங்க வேண்டும் என கடந்த 14.02.2019 அன்று தீர்ப்பளித்தது.

ஆனால், விபத்தில் இறந்த பாபுவின் குடும்பத்தினருக்கு இதுவரை இழப்பீடு வழங்காத தால், அவர்கள் ராணிப்பேட்டை நீதிமன்றத் தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தனர். அதன் பேரில், விபத்தில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்காத அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய ராணிப்பேட்டை மாவட்டக் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் உத்தரவிட்டார்.

இதையடுத்து, வேலூரில் இருந்து அரக் கோணம் செல்ல ராணிப்பேட்டை முத்துகடை பேருந்து நிலையத்துக்கு திங்கள்கிழமை வந்த அரசுப் பேருந்து (தடம் எண் 486) ஜப்தி செய்யப்பட்டு, ராணிப்பேட்டை நீதிமன்ற வளாகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த வழக்கில் மனுதாரர் தப்பில் வழக்கறிஞர் எஸ்.அண்ணதுரை ஆஜராகினார்.