ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் நீண்ட நாட்களாக மரம் ஒன்று பட்டுப்போன நிலையில் இருந்தது. 

நேற்று திடீரென அந்த மரம் பெரும் சத்தத்துடன் முறிந்து போலீஸ் ஸ்டேஷன் வெளிப்புறம் உள்ள உயர் அழுத்த மின் கம்பிகள் மீது விழுந்தது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக மின் சாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடன் அவர்கள் விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்து சரிசெய்தனர். 

எப்போதும் ஜன நடமாட்டம் உள்ள அந்தப்பகுதியில் மரம் விழுந்து மின்சார கம்பிகள் அறுந்து விழுந்த நேரத்தில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் இல்லை.