வேலூர் சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்தவர் வஜ்ரவேல் (வயது 86). இவருக்கு சொந்தமான நிலம் ரத்தினகிரி அடுத்த டி.சி.குப்பத்தில் உள்ளது. நிலத்தை பார்ப்பதற்காக நேற்று மதியம் மோட்டார் சைக்கிளில் வஜ்ரவேல் சென்றுள்ளார். 

பின்னர் திருவலம் அடுத்த அம்முண்டியில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக சென்ற அவர் அரப்பாக்கம் அருகேசாலையை கடப்பதற்காக நின்று உள்ளார்.

அப்போது சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த மினி லாரி வஜ்ரவேல் மீது மோதியது. இதில் ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறிது நேரத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். 

இது குறித்த புகாரின் பேரில் ரத்தினகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து மினி லாரியை பறிமுதல் செய்து, விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.