காதல் திருமணம் செய்த தம்பதி ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை
திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் காலனியை சேர்ந்தவர் சவுந்தர ராஜன்(25). மயிலாடும் பாறை கிராமத்தை சேர்ந்தவர் பவித்ரா(22). இருவரும் ஆர்.கே பேட்டையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தனர். அப்போது இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பவித்ரா 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இதற்கிடையில், நேற்று கணவன் - மனைவி இரு வரும் ஒரே சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டனர். தகவலறிந்த ஆர்.கே.பேட்டை போலீசார் அங்கு விரைந்து வந்து இருவர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஆர்.கே. பேட்டை போலீசார் வழக்குப்பதிவு, கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.