Mahindra Electric Suv launch: Mahindra unveils 5 e-SUVs
மின்சாரத்தில் இயங்கக் கூடிய தனது 5 புதிய ஸ்போர்ட்ஸ் பயன்பாட்டு வாகனங்களை (எஸ்யுவி) இந்தியாவின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா அண்டு மஹிந்திரா அறிமுகப் படுத்தியுள்ளது.
ஏற்கெனவே சந்தையில் புழங்கும் ‘எக்ஸ்யுவி' என்ற பெயரிலும், முற்றிலும் புதிய 'பிஇ' என்ற பெயரிலும் இந்த மின் எஸ்யுவிக்கள் விற்பனை செய்யப்படவுள்ளன. போக்ஸ்வேகன் நிறுவன மின் வாகனங்களின் அடித்தளங்களில் பயன்படுத்தப்படும் பொருகளைப் பயன்படுத்தி, மஹிந்திரா உருவாக்கியுள்ள அதிநவீன 'இன்குளோ' மின் வாகன அடித்தளத்தில் இந்த மின் எஸ்யுவிக்கள் கட்டமைப்பட விருக்கின்றன.
வரும் 2024-ஆம் ஆண்டிலிருந்து 2026-ஆம் ஆண்டுக்குள் இந்த 5 மின்சார வாகனங்களும் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்று நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.