India unveils first Saline Water Lantern using sea water to power specially designed LED lamps
கடல் நீரை எலக்ட்ரோலைட்டாகப் பயன்படுத்தும் இந்தியாவின் முதல் உப்பு நீர் எல்இடி விளக்கு அறிமுகம் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிமுகம் செய்தார்.

எல்.இ.டி விளக்குகளை இயக்குவதற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட மின்முனைகளுக்கு இடையே கடல் நீரை எலக்ட்ரோலைட்டாகப் பயன்படுத்தும் இந்தியாவின் முதல் உப்பு நீர் விளக்கை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் (தனிப்பொறுப்புகள்), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைதீர்வு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் சென்னையில் அறிமுகப்படுத்தினார்.
கடல்சார் ஆராய்ச்சிக்காக சென்னையில் உள்ள தேசிய பெருங்கடல் தொழில்நுட்பக் கழகத்தால் இயக்கப்பட்டு, பயன்படுத்தப்படும் சாகர் அன்வேஷிகா என்ற கடல்சார் ஆராய்ச்சி கப்பலை நேரில் சென்று பார்த்த அவர் ரோஷினி என்று பெயரிடப்பட்ட இந்த விளக்கை அறிமுகப்படுத்தினார்.

இந்த உப்பு நீர் விளக்கு, ஏழைகளுக்கும், எளியவர்களுக்கும், குறிப்பாக இந்தியாவின் 7500 கிலோமீட்டர் கடற்கரை பகுதிகளில் வசிக்கும் மீனவ சமூகத்தினருக்கு எளிதான வாழ்வை ஏற்படுத்தும் என்று அமைச்சர் கூறினார்.