குறள் : 842
அறிவிலான் நெஞ்சுவந் தீதல் பிறிதியாதும்
இல்லை பெறுவான் தவம்
மு.வ உரை :
அறிவில்லாதவவன் மனம் மகிழ்ந்து ஒரு பொருளைக் கொடுத்தலுக்கு காரணம் வேறொன்றும் இல்லை அப் பொருளைப் பெறுகின்றவனுடைய நல்வினையே ஆகும்.
கலைஞர் உரை :
அறிவில்லாத ஒருவன் வள்ளலைப்போல ஒரு பொருளை மகிழ்ச்சியுடன் வழங்குவதற்குக் காரணம் வேறொன்றுமில்லை; அது அப்பொருளைப் பெறுகிறவன் பெற்றபேறு என்றுதான் கருதவேண்டும்
சாலமன் பாப்பையா உரை :
அறிவற்றவன் மனம் மகிழ்ந்து ஒன்றைப் பிறர்க்குத் தந்தால், அது பெறுகின்றவன் செய்த நல்வினையே.
Kural 842
Arivilaan Nenjuvandhu Eedhal Piridhiyaadhum
Illai Peruvaan Thavam
Explanation :
(The cause of) a fool cheerfully giving (something) is nothing else but the receivers merit (in a former birth).
Horoscope Today: Astrological prediction for August 15 2022
இன்றைய ராசிப்பலன் - 15.08.2022 | Indraya Rasi Palan
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
15-08-2022, ஆடி 30, திங்கட்கிழமை, சதுர்த்தி திதி இரவு 09.02 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு 09.06 வரை பின்பு ரேவதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. மஹா சங்கடஹர சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் | Indraya Nalla Neram
காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
இன்றைய ராசிப்பலன் - 15.08.2022 | Today rasi palan - 15.08.2022
மேஷம்
இன்று பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படக்கூடும். நண்பர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும். உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். தொழிலில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும்.
ரிஷபம்
இன்று உத்தியோகத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் கூடும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். கடன் பிரச்சினை குறையும்.
மிதுனம்
இன்று நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். சகோதர, சகோதரிகளின் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகத்தில் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.
கடகம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமையற்ற சூழ்நிலை ஏற்படும். ஆரோக்கிய ரீதியாக சிறு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். வியாபாரம் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். திருமண முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும்.
சிம்மம்
இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம். பணிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது.
கன்னி
இன்று இல்லத்தில் தாராள தன வரவும், மகிழ்ச்சியும் உண்டாகும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து கடன் உதவி கிட்டும். வெளியூர் பயணங்களில் புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். வருமானம் பெருகும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
துலாம்
இன்று கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவோடு செயல்படுவீர்கள். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிலவும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு குடும்பத்தில் உள்ளவர்களால் எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் லாபத்தை அடைய முடியும்.
தனுசு
இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்த நிலையும் உண்டாகும். சுப முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படும். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். உங்களின் முயற்சிளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.
மகரம்
இன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலம் கிட்டும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.
கும்பம்
இன்று உங்களுக்கு பணப்புழக்கம் சற்று குறைவாக இருக்கும். வேலையில் எதிர்பாராத பிரச்சினைகள் தோன்றும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண பற்றாக்குறையை தவிர்க்கலாம். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.
மீனம்
இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரம் சம்பந்தமாக பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஒரு சிலருக்கு புதிய பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001