குறள் : 841
அறிவின்மை அன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு
மு.வ உரை :
அறியாமையே இல்லாமைப் பலவற்றுள்ளும் கொடிய இல்லாமையாகும் மற்ற இல்லாமைகளை உலகம் அத்தகைய இல்லாமையாகக் கருதாது.
கலைஞர் உரை :
அறிவுப் பஞ்சம்தான் மிகக் கொடுமையான பஞ்சமாகும் மற்ற பஞ்சங்களைக்கூட உலகம் அவ்வளவாகப் பொருட்படுத்தாது
சாலமன் பாப்பையா உரை :
இல்லாமை பலவற்றுள்ளும் இல்லாமை, அறிவு இல்லாமல் இருத்தலே, பிற இல்லாமையைப் பெரியோர் இல்லாமையாகக் கருதமாட்டார்.
Kural 841
Arivinmai Inmaiyul Inmai Piridhinmai
Inmaiyaa Vaiyaa Thulaku
Explanation :
The want of wisdom is the greatest of all wants; but that of wealth the world will not regard as such.
Horoscope Today: Astrological prediction for August 14 2022
இன்றைய ராசிப்பலன் - 14.08.2022 | Indraya Rasi Palan
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
14-08-2022, ஆடி 29, ஞாயிற்றுக்கிழமை, திரிதியை திதி இரவு 10.36 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. பூரட்டாதி நட்சத்திரம் இரவு 09.55 வரை பின்பு உத்திரட்டாதி. சித்தயோகம் இரவு 09.55 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. >
இராகு காலம் | Indraya Nalla Neram
மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00.
இன்றைய ராசிப்பலன் - 14.08.2022 | Today rasi palan - 14.08.2022
மேஷம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உறவினர்கள் உங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். தொழில் முன்னேற்றத்திற்காக போட்ட திட்டங்கள் நிறைவேறும். எடுக்கும் முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கி சாதகமான பலன் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
ரிஷபம்
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களிடம் சுமூக உறவு ஏற்படும். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைக்கூடும்.
மிதுனம்
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் நிம்மதி குறையும். வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் குறையும். நண்பர்களின் சந்திப்பு மனமகிழ்ச்சியை தரும். தெய்வ வழிபாடு நல்லது.
கடகம்
இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். தேவையற்ற அலைச்சல்களால் டென்ஷன் உண்டாகும். உங்கள் ராசிக்கு மாலை 04.15 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மதியத்திற்கு பிறகு ஏற்றமிகுந்த பலன்கள் ஏற்படும். எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்வது உத்தமம்.
சிம்மம்
இன்று உங்கள் ராசிக்கு மாலை 04.15 மணி முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
கன்னி
இன்று பணவரவு அமோகமாக இருக்கும். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும். பிள்ளைகளால் மனம் மகிழும் செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும்.
துலாம்
இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மன அமைதி குறையும். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படும். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
விருச்சிகம்
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் குறையும். நண்பர்களின் சந்திப்பு மனநிம்மதியை தரும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் காணலாம். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.
தனுசு
இன்று எந்த செயலையும் மன துணிவோடு செய்து முடிப்பீர்கள். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். தொழில் ரீதியாக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உருவாகும். வியாபாரத்தில் வருமானம் பெருகும். கடன் பிரச்சினைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சீராகும்.
மகரம்
இன்று நீங்கள் செய்ய நினைக்கும் செயல்களில் சில இடையூறுகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சினைகள் உண்டாகும். குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் ஒற்றுமை நிலவும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்தால் லாபம் அடையலாம். தெய்வ வழிபாடு நல்லது.
கும்பம்
இன்று நீங்கள் எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்லது நடைபெறும். பிள்ளைகள் வழியில் சுப செய்தி வரும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பழைய பாக்கிகள் இன்று வசூலாகும்.
மீனம்
இன்று குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் சில இடையூறுகள் ஏற்படக்கூடும். எடுக்கும் காரியத்தில் வெற்றி காண கடின உழைப்பு தேவை. உற்றார் உறவினர்கள் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் குறையும். உங்கள் தேவைகள் பூர்த்தியாகும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001