தமிழில் தனுஷ் ஜோடியாக 'மாப்பிள்ளை' படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக உயர்ந்த ஹன்சிகா தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்துள்ளார். இந்தி, மலையாளம், கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். விஜய், சூர்யா, கார்த்தி, ஆர்யா, உதயநிதி, விஷால், ஜீவா, பிரபுதேவா, விக்ரம் பிரபு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார். ஹன்சிகாவின் 50-வது படமான மஹா சமீபத்தில் வெளியானது. தற்போது தமிழ், தெலுங் கில் 7 படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஹன்சிகா திருமணத்துக்கு தயாராகி வருவதாக இணையதளத்தில் தகவல் பரவி உள்ளது. தென் இந்திய அரசியல்வாதியின் மகனை ஹன்சிகா திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், மணமகன் தொழில் அதிபராக இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் திருமண தகவலை ஹன்சிகா தரப்பில் உறுதிப்படுத்த வில்லை. ஹன்சிகா ஏற்கனவே நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்ய இருந்த நிலையில் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்தனர்.