நெமிலி தாலுகாவில் தை மாத அறுவடைக்கு தயாராகும் விவசாயிகள், கூலி ஆட்கள் பற்றாக்குறையால் இயந்திரத்தில் நெல் நாற்று நடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.இதன் மூலம் அதிக லாபம் கிடைக்கும் என தெரிவித்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் கூலி ஆட்கள் பற்றாக்குறையால், பெரும் பாலான விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் இயந்திரங்கள் மூலம் நெல்நாற்று நடும் பணியில் ஈடு பட்டுள்ளனர். இதன் மூலம் தை மாத அறுவடைக்கு தயாராகி வருவதாகவும், அதிக லாபம் கிடைக்கும் என்றும் விவசாயிகள் தெரி வித்தனர்.

இதுகுறித்து விவசாயி கள் கூறியதாவது:

Farmers who are preparing for the harvest of Thai month are planting paddy seedlings by machine due to shortage of laborers

ஆடி மாதத்தில் விதை விதைத்து விவசாயம் செய்தால், தை மாதத்தில் அறுவடை செய்யலாம். பயிர்களுக்கு தேவையான சூரிய ஒளியும், பிராண வாயுவும், நல்ல மழையும் கிடைத்து, விவசாயிகளுக்கு சிறப்பான அறுவடையைக் கொடுக்கும். கடுமையான கோடைக் காலங்களைச் சந்தித்த மண், இறுகி கடினமாக மாறியிருக்கும். ஆனி மழையில் இறுக்கங்கள் தளர்ந்து இதமாக இளக தொடங்கும்.

இதனால் ஆடி மாதத்தில் விதைத்த நெல்மணிகள் முளைத்துள்ள நிலையில், நாற்று நடும் பணியில் ஈடுபட்டுள்ளோம். ஆனால் 100 நாள் வேலை உட்பட பல்வேறு பணிகளுக்கு பலர் சென்றுவிடுவதால், விவசாய பணிகளுக்கு போதிய கூலி ஆட்கள் கிடைப்பதில்லை. இதனால் விவசாயத்தில் இயந்திர பயன்பாடு என்பது மிக அவசியமாகி விட்டது.

அதற்கேற்ப நவீன இயந்திரங்கள் வருகையால் வேலையாட்கள் தேவை குறைவதோடு, வேலையை விரைவாக முடிக்கவும் முடிகிறது.

இயந்திரங்கள் மூலம் குறைந்த நேரத்தில் அதிக பரப்பிலான சாகுபடியும் மேற்கொள்ள முடிகிறது. இதன் மூலம் அதிக லாபம் கிடைக்கிறது. மேலும் அரசு சார்பிலும் மானியம் வழங்கப்படுகிறது. இதனால் இயந்திரங்கள் மூலம் நடவு பணியில் ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.