இந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோனே. இவர் மன அழுத்தத்தில் இருந்து எவ்வாறு மீண்டு வந்தேன் என்பதை விளக்கியுள்ளார்.
சில நேரங்களில் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூட எனக்கு தோன்றும். ஆனால் அவற்றை எல்லாம் நான் கடந்து வந்து விட்டேன். என்னுடைய தாய்க்கு நன்றி! என்னுடைய அம்மாவுக்கே அனைத்து நன்றிகளும் போய் சேரும். நான் சினிமா தொழிலில் புகழின் உச்சியில் இருந்தேன். எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால் திடீரென்று காரணமே இல்லாமல் நான் உடைந்து விடுவேன். எனக்கு அதீத மன அழுத்தம் ஏற்பட்டது. தினமும் காலையில் எழுந்த போது ஒன்றுமே இல்லாதது போல தோன்றும். அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்பது குறித்த எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல், வெறுமனே இருக்கும். அதன் காரணமாக அழ ஆரம்பிப்பேன். பின், தியானம் செய்ய ஆரம்பித்தேன். 

ஒரு மனநல மருத்துவரிடம் சென்று மருத்துவ ஆலோசனைகளை முறையாக பெற்று வந்தேன். பல மாதங்கள் அவ்வாறு சென்றன. முதலில் மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெற தயக்கமாக இருந்தது. ஆனால் நான் மனப்போராட்டங்களை கடந்து சிகிச்சை பெற்று மீண்டு வந்தேன்" என்று கூறினார்.