ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையத்தில் வரும் 12 மற்றும் 26 ஆகிய இரண்டு நாட்களில் சிறிய அளவிலான தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
இந்த முகாமில் 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பிஇ படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். மேற்காணும் கல்வித்தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 12 மற்றும் 26 ஆகிய நாட்களில் காலை 10.00 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மைய அலுவலகத்தில் நடக்கும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.