The bus lost control and ran over the train tracks
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் டூ காஞ்சிபுரம் ரோட்டில் மாநில நெடுஞ்சாலை பணிகள் சில மாதங்களாக நடந்து வருகிறது. இதனால் திருப்பதி செல்லும் ஆந்திர மாநில அரசு பஸ்கள், தனியார் கம்பெனி பஸ்கள் என வாகனங்கள் பல வழிகளில் திருப்பி விடப்படுகிறது.
நேற்று காலை காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 60 பயணிகளை ஏற்றிக்கொண்டு திருத்தணி நோக்கி தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. ஆட்டுப்பாக்கம் ரயில்வே கேட் அருகே வந்தபோது, திடீரென பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்த பஸ், ரயில் தண்ட வாளம் மீது ஏறி நின்றது.
இதனால் பஸ்சில் பயணித்த பயணிகள் பயத்தில் கூச்சல் போட்டனர். சிறிது நேரத்தில் அந்த வழியாக ரயில் கடக்க இருந்த நேரத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்த்தப்பினர்.