வணியம்பாடி அடுத்த இந்திரா நகர் வன பத்ரகாளியம்மன் ஆலயத்தில் ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம் பூ பூத்தது.

Brahma Kamalam flower in Bhadrakaliamman Temple in Vaniyampadi!



பிரம்மகமலம்பூ, சிவபெருமானுக்கு மிகவும் உகந்தது என பக்தர்களின் நம்பிக்கை, பிரம்ம கமலம் பூ இமயமலைப் பகுதியை பூர்வீகமாகக் கொண்டதாக கூறப்படுகிறது.

இது ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் தன்மையுடையது. இரவில் மலர்ந்து பகலில் வாடிவிடும். மலர் பூப்பதைப் பார்ப்பவர்கள் மிகவும் அதிர்ஷ்ட சாலி என்று மக்கள் கூறுகிறார்கள்.

இந்த மலரை சிவனும் சக்தியும் சேர்ந்து அருள் பாலிப்பது எனவும் மனதில் நினைத்து வேண்டிக் கொண்டால் நினைத்தது நிறை வேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

மருத்துவகுணம் நிறைந்த இப்பூ திருப்பத்தூர் மாவட்டம் இந்திரா நகர் பகுதியில் உள்ள பத்ரகாளியம்மன் ஆலயத்தில் பூத்துள்ளது.

நேற்று இரவு 9 மணிக்கு மேல் பூக்க துவங்கி அதி காலை 2 மணிக்கு பூ விரிவடைத்ததுள்ளது. ஆலயத்திற்கு வந்த பக்தர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் அந்த பூவை பூஜை செய்து வழிபட்டனர்.