Aishwarya Rai's 'flashy' answer to an intimate question
உலக அழகி' பட்டம் வென்ற பின்னர், ஐஸ்வர்யா ராய் இருவர்” படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். 'ஜீன்ஸ்', 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' போன்ற படங்களிலும் நடித்தார். பின்னர் இந்தி சினிமாவில் நடிக்கத் தொடங்கி, அங்கு உச்ச நட்சத்திரமாக ஜொலித்தார். இந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் மாறினார். பின்னர் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனை விட 5 வயது பெரியவர்.
ஐஸ்வர்யா ராய் நடிப்பில் பொன்னியின் செல்வன்' படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் அவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால் அவர் நடிப்பதை தற்காலிகமாக ஒத்திவைத்திருக்கிறார். உடற்பயிற்சிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஐஸ்வர்யா ராய் மனம் திறந்து சில கருத்துகளை கூறியிருக்கிறார். அப்போது தாம்பத்யம் குறித்த ஒரு கேள்விக்கு, அவர் பளிச் என பதில் அளித்தார். அவர் கூறியதாவது:
"தாம்பத்யம் என்பது உள்ளமும், உணர்ச்சியும் ஒன்று சேர இருவருக்கும் வர வேண்டும். அப்போதுதான் அது இன்பத்தையும் நிம்மதியையும் தரும். இல்லை என்றால் அது காமத்துக்காக செய்யப்படும் ஒரு செயலாகவே தோன்றும். கணவன், மனைவியாக இருந்தாலும் இருவரும் மனதார அந்த உறவில் ஈடுபட வேண்டும். கடமைக்காக எதையும் செய்யக்கூடாது. நானும், எனது கணவரும் நிம்மதியாக இருக்கிறோம். என்னால் அவர் சந்தோஷமாக இருக்கிறார், அவரால் நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். எங்கள் தாம்பத்யம் இதுதான்”.