தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் 20 வருடங்கள் முன்னணி கதாநாயகியாக கொடி கட்டி பறக்கும் திரிஷா அரசியலில் ஈடுபட தயாராகி வருவதாகவும், காங்கிரஸ் கட்சியில் இணைய வாய்ப்பு உள்ளதாகவும், காங்கிரசின் மூத்த தலைவர்கள் திரிஷாவை தொடர்பு கொண்டு இது குறித்து பேசி வருவதாகவும் இணையதளங்களில் தகவல் பரவி உள்ளது.
ஏற்கனவே காங்கிரசில் இணைந்து பணியாற்றிய நடிகை குஷ்பு பா.ஜ.க. வில் சேர்ந்து விட்டதால் திரிஷாவை கட்சியில் இணைத்து பிரசாரத்துக்கு பயன்படுத்தி காங்கிரசுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்த கட்சியினர் திட்டமிடுகிறார்கள் என்று கூறப்படுகிறது.
ஆனாலும் திரிஷா தரப்பில் தொடர்பு கொண்டு கேட்டபோது, இதனை உறுதிப் படுத்தவில்லை. 40 வயதை நெருங்கும் திரிஷாவுக்கு ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்து கடைசி நேரத்தில் திருமணம் நின்று போனது. தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் மற்றும் சதுரங்க வேட்டை 2-ம் பாகம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். மோகன் லாலுடன் மலையாள படமொன்றிலும் நடிக்கிறார். தொலைக் காட்சி தொடரி லும் நடிக்கிறார்.