பிரீமியம் மாடல் ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் நிறுவனம் புதிதாக 9டி மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது 6.75 அங்குல முழு ஹெச்.டி. பிளஸ் சாம்சங் இ 5 அமோலெட் திரையைக் கொண்டுள்ளது. இதில் 8-வது தலைமுறை எஸ்.ஓ.சி. பிராசஸர் மற்றும் திரவ கூலிங் வசதி உள்ளது. ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் உடையது, வீடியோகேம் விளையாட்டுப் பிரியர்களுக்கேற்ப இதில் டியூயல் மான்ஸ்டர் டச் வசதி உள்ளது.
இதனால் மிகவும் தீவிரமான விளையாட்டுகளில் நான்கு விரல்களைக் கொண்டு வீடியோ கேம் விளையாடும் வசதி உள்ளது.
திரையிலேயே விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. டிஜிட்டல் கேமராவுக்கு இணையாக 50 மெகா பிக்ஸெல் கேமரா இதன் பின்புறம் உள்ளது. இதில் 4,700 எம்.ஏ.ஹெச். திறன் உடைய இரட்டை (டியூயல்) பேட்டரி உள்ளது. விரைவாக சார்ஜ் ஆக வசதியாக 120 வாட் சார்ஜருடன் இது வந்துள்ளது. இதனால் இது முழுமையாக சார்ஜ் ஆக 20 நிமிடம் போதுமானது.
இதில் 12 ஜி.பி, ரேம், 256 ஜி.பி, நினைவகம் உள்ளது. செல்பி பிரியர்களுக்கென முன்புறம் 16 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. கண்கவர் வண்ணங்களில் வந்துள்ள இந்த மாடலின் விலை சுமார் ரூ.49,999.