48 new ponds are being cut to create water levels in Ranipet district, Project Director Information


ராணிப்பேட்டை மாவட்டத்தில், உள்ளூர் நீர்நிலைகளை உருவாக்கும் பொருட்டு, புதிதாக 48 குளங்கள் வெட்டும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது என திட்ட இயக்குனர் லோகநாயகி தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ஒன்றியம் இச்சிப்புத்தூர், தணிகைப்போளூர், பாராஞ்சி, உளியம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் புதிதாக ரேஷன் கடை, அங்கன் வாடி மையம், பள்ளிக்கூடம், சந்தை போன்ற கட்டிடங்கள் கட்டும்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குனர் லோகநாயகி நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

அதன்படி, அரக்கோணம் - வாணியம்பேட்டை செல்லும் தார்சாலை தரமாக போடப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.

அப்போது, பிடிஓக்கள் குமார், வெங்கடேசன்,  பொறியாளர்கள் துரை பாபு, சரவணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் பத்மநாபன். வெங்கடேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர். திட்ட இயக்குனர் லோகநாயகி கூறுகையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளூர் நீர் நிலைகளை உருவாக்கும் பொருட்டு, அம்ருத் சரோவர் திட்டத்தின் கீழ் பல்வேறு இடங்களில் புதிதாக 48 குளங்கள் வெட்டப்படுகிறது.

முதல் கட்டமாக 14 குளங்கள் வெட்டும் பணிகள் முடிவடைந்துள்ளது. மேலும், 34 குளங்கள் வெட்டும் பணிகள் தற்போது நடந்து வருகிறது.

அதேபோல், மாவட்டம் முழுவதும் முதல் கட்டமாக 60 ஊராட்சிகளில் அனைத்துகிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்- 2 நடைமுறைப் படுத்தப்பட உள்ளது. இதற்கான, டெண் டர் பணிகளும் தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது.

மேலும், 2ம் கட்ட அனைத்துகிராம் அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளும் ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு, டெண்டர் விடும் பணி கள் விரைவில் நடைபெற உள்ளது' என்றார்.