சமந்தாவின் பெயர் எல்லைகளை தாண்டி இந்தியா முழுவதும் பரவி வருகிறது. அவரது ரசிகர்கள் பட்டியலில் இந்தி கதாநாயகர்களும் சேர்ந்துள்ளனர். சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற சமந்தா இந்தி நடிகர் ரன்வீர் சிங்கை பிடிக்கும் என்றும், அவருடன் விருந்து நிகழ்ச்சியில் இணைந்து நடனமாட ஆசை உள்ளது என்றும் தெரிவித்து இருந்தார். ரன்வீர் சிங் நடிப்புக்கு நான் தீவிர ரசிகை என்றும் கூறினார். சமந்தாவின் கருத்து வைரலானது.

ரன்வீர் சிங் காதுக்கும் இது எட்டியது. இதையடுத்து சமந்தாவை பாராட்டி ரன்வீர் சிங் அளித்துள்ள பேட்டியில், "சமந்தாவை எனக்கும் பிடிக்கும். அவருடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்க ஆசையாக உள்ளது. ஏற்கனவே ஒரு விளம்பர படத்தில் நாங்கள் சேர்ந்து நடித்தோம். அதன் பிறகு எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது. சமந்தா திறமையான நடிகை. எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்.நகைச்சுவையாக பேசி பக்கத்தில் இருப்பவர்களை மகிழ்ச் சியாக வைத்து இருப்பார்" என்றார்.

ஆயுஷ்மான் குரானா மற்றும் அக்ஷய்குமார் ஆகியோருடன் 2 இந்தி படங்களில் நடிக்கிறார். சமந்தாவுடன் நடிக்க ரன்வீர் சிங் விரும்புவதால் அவருடன் நடிக்கவும் தயாராகி வருகிறார்.