வாக்காளர் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி குறித்த ஆலோசனை கூட்டம் ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலை மையில் நடந்தது.

அப்போது கலெக்டர் பேசியதாவது:

Those who have completed 17 years of age can immediately apply for voter registration Ranipet Collector Information


வாக்காளர் பட்டியலை 100 சதவீதம் தூய்மையாக்குதல், பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துதல், ஒரு நபரின் பெயர் ஒரே தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இடம்பெறுதல் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் இடம் பெறுதலை தவிர்த்தல், சிறப்பான வாக்காளர் சேவைகளை வழங்குவதல் ஆகிய நோக்கங்களுக்காக வாக்காளர் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் பணிகள் கடந்த 1 ம் தேதி முதல் நடந்து வருகிறது.

வாக்காளர்கள் தாங்களாகவே ஆதார் எண்ணை https://www.nvsp.in இணையதளம் வாயிலா கவோ அல்லது வாக்காளர் உதவி செயலி (Voters helpline App) வாயிலாகவோ தங்களது வாக்காளர் பட்டியலிலுள்ள விபரங்களுடன் இணைக்கலாம். மேலும், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக வீடு வீடாக சென்று படிவம் 6 பி ல் வாக்காளர்களது ஆதார் எண்ணை பெற்று இணைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, வாக்காளர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம், உதவி வாக்காளர் பதிவு அலுவலகம், வாக்காளர் உதவி மையம் மற்றும் பொது இ-சேவை மையங்களிலும் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத் துக் கொள்ளலாம்.

வாக்காளர்களின் ஆதார் எண்ணானது பொது வெளியில் எக்காரணம் கொண்டும் காட்சிப்படுத்தபட மாட்டாது. ஆதார் விபரங்கள் ஆதார் ஆணையத்தின் உரிமம் பெற்ற சேமிப்பகத்தில் மட்டுமே சேமிக்கப்படவுள்ளது. இதன் மூலம் பாதுகாப்பு உறுதி செய்யப்படவுள்ளது என்று தெரிவிக்கப் படுகிறது.

தற்போது வாக்காளராக பதிவு செய்வதற்கு நடைமுறையில் உள்ள ஜனவரி 1 ம் தேதிக்கு பதிலாக

ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1 ஆகிய நான்கு நாட்கள் தகுதியானதாக நடைமுறைக்கு வருகிறது. இளைஞர்கள் வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ள 18 வயதாகும் வரை காத்திருக்க வேண்டியதில்லை. 17 வயது நிறைவடைந்த அனைவரும் முன்னதாகவே விண்ணப்பிக்கலாம்.

இவர்களது விண்ணப்பங்கள் இவர்களது பிறந்த தேதியினை அடிப்படையாக கொண்டு அந்தந்த காலாண்டுகளில் பரி சீலனை செய்யப்பட்டு முடிவு எடுக்கப்படும். எதிர் வரும் சுருக்கத்திருத்தம் 2023ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் 1 ம் தேதி யன்று தகுதி பெறும் விண்ணப்பங்கள் முடிவு செய்து வெளியிடப்படும். மேலும், நடைமுறையில் உள்ள படிவம் 6, படிவம் 7, படிவம் 8 ஆகியவற்றில் மாற்றங்கள் செய்து எளி மையாக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு கலெக்டர் பேசினார்.