ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.
சோளிங்கர் மற்றும் கல்பட்டு, சோம சமுத்திரம், மோட்டூர், கொண்டபாளையம், எரும்பி உள்ளிட்ட 30- க்கும் மேற்பட்ட கிராமங்களில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

மாலையில் தொடங்கிய மழை இரவு முழுவதும் பெய்தது. ராணிப்பேட்டை, சிப்காட் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு திடீரென்று மழை பெய்தது. பகலில் வெய்யில் காய்ந்த நிலையில், இரவில் பெய்த மழை பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அதிகபட்சமாக கலவையில் 45.80 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.


மாவட்டம் முழுவதும் பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-


கலவை- 45.80, 
சோளிங்கர்- 39, 
காவேரிபாக்கம்- 25, 
வாலாஜா- 6.40, 
அம்மூர்-3, 
அரக்கோணம்- 1.20.

மேலும் நேற்று ஆற்காடு, ராணிப்பேட்டை மற்றும் சுற்றுப்புற பகுதியில் இரவு ஒரு மணி நேரத்துக்கும் மேல் பலத்த மழை பெய்தது.