ஆடி மாதம் பிறப்பையடுத்து ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை தினசரி பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் கிடுகிடு வென உயர்ந்துள்ளது.
மேலும் வாலாஜாபேட்டை பூ மார்க்கெட்டுக்கு வேலூர் ஒசூர்கிருஷ்ணகிரி பகுதிகளில் இருந்து அனைத்து வகையான பூக்களும் விற்பனைக்கு வந்து குவிந்தனர்.

தொடர்ந்து  பூக்கள் வரத்து குறைந்தபோதும் விசேஷ தினங்கள் இல்லாததால் இம்மாத துவக்கம் முதலே, பூக்கள் விலை குறைவாகவே இருந்தது. மல்லி பூ கிலோ ரூ. 450, முல்லை 250, சாமாந்தி 160, சம்பங்கி 100, விற்பனை என்ற அளவிலேயே இருந்தது. 

நேற்று, ஆடி மாதம் பிறந்த நிலையில் முதல் நாள் என்பதால் வாலாஜாபேட்டை சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை துவங்கியது. இதனால் பூக்களின் தேவை அதிகரித்து விலையும் உயர்ந்தது அதன்படி இன்றைய நிலவரப்படி, மல்லிகை கிலோ 700, ரூபாய் முல்லை 600, சம்பங்கி 100,ரோஜாபூ100,சாமாந்தி 160, மாலை, பெரியது 600 சிறியமாலை 200 ரூபாயாக இருந்தது.

இதைப்பற்றி பூக்களை வாங்க வரும் பெண்களிடம் கேட்கையில் இந்த மாதங்களில் பூக்களின் விலை சற்று குறைந்தே காணப்பட்டதாகவும் ஆடி மாதம் பிறந்த முதல் நாளில் மல்லி முல்லை பூக்களின் விலை கிடுகிடுவன உயர்ந்ததால் பூக்கள் வாங்கவரும் அனைத்து பெண்களும் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்று கூறினர்.