வேலூர் அடுத்த கீழ் ஆலத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி. இவர் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

இவரது கணவர் உமாபதி. இந்நிலையில் கடந்த வருடம் கால்நடைத் துறையில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி சாந்தி மற்றும் அவரது கணவர் உமாபதி ஆகிய இருவரும் சேர்ந்து 50க்கும் மேற் பட்டோரிடம் ரூ. 25 லட்சம் வரை வசூலித்ததாக தெரிகிறது.இதில் கே.வி.குப்பம், மாச்சனூர் பகுதியைச்  சேர்ந்த விவசாயியான சிவச்சந்திரன் என்பவரும் சாந்தியிடம் பணம் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் பணம் கொடுத்த பிறகும் வேலை வழங்கப்படாததையடுத்து சந்தேகம் அடைந்த சிவச்சந்திரன் மற்றும் அவரது அண்ணன் பிரதீப் ஆகியோர் சாந்தியிLம் முறையிட்டுள்ளனர். ஆனால் வேலைவிஷயமாக மேலதிகாரிகளுக்கு பணத்தை கொடுத்து விட்டதாக சாந்தி கூறியுள்ளார்.
இதனையடுத்து பணத்தை ஏமாற்றிவிட்டதாகக் கூறி கே.வி.குப்பம் காவல் நிலையத்தில் சிவச் சந்திரனின் அண்ணன் பிரதீப் புகார் அளிக்க முயன்றார். அப்போது சாந்தியின் கணவர் உமாபதி பிரதீப்பை தாக்கியதாக தெரிகிறது. இந்நிலையில் பணத்தைத் திருப்பித்தாராமல் தன்னைத் தாக்கியதாக சாந்தியின் கணவர் மீது பிரதீப் புகார் அளித் துள்ளார். இதற்கிடையில் வேலூரில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் அலுவலகத்தில் இன்று சிவச்சந்திரன் மற்றும் பிரதீப் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.