வேலூரில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் அனைத்துப் பேருந்துகளும் புதன்கிழமை முதல் மக்கான் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேலூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் சித்தூர், திருப்பதி மார்க்கமாக செல்லும் அனைத்துப் பேருந்துகள், திருவண்ணாமலை, திருச்சி, ஆரணி, விழுப்புரம் மார்க்கமாகச் செல்லும் அனைத்துப் பேருந்துகள் ஆகியவை புதன்கிழமை முதல் வேலூர் மக்கான் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளன.
மேலும், திருச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, ஆரணி மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் மக்கான் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு வேலூர் பழைய பேருந்து நிலையம் வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.