அரக்கோணம் அடுத்த ஒச்சாலம் கிராமத்தைச் சேர்ந்தவர்  தினேஷ் குமார்(22). இவர் நேற்று முன்தினம் அதேபகுதியில் உள்ள சீனிவாசன் என்பவருடைய விவசாய கிணற்றில் குளிக்கச் சென்றார்.

அப்போது ஆழமான பகுதியில் சிக்கி தண்ணீரில் மூழ்கினார். அவருடைய கதறல் சத்தம்கேட்டு ஓடவந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்க முயன்றனர்.

ஆனால், தினேஷ்குமார் பரிதாபமாக இறந்தார். அரக்கோணம் தீயணைப்புத் துறையினர் தினேஷ் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.