அணைக்கட்டு தொகுதி ஊசூர் அடுத்த தெள்ளூர், ஜமால்புரம், வடக்குமேடு, வண்டிமேடு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் ஊசூர் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளியில் படித்து வருகின்றனர். 

இப்பகுதி கிராமப்புற மாணவர்கள் ஊசூர் பள்ளிகளுக்கு வந்து செல்லுவதற்கு வசதியாக அரசு டவுன் பஸ்காலை, மாலை நேரங்களில் இயக்கப்பட்டு வருகிறது. சமீப காலமாக மாலையில் இயக்கப்படும் பஸ் அடிக்கடி நிறுத்தப்படுகிறது. ஏற்கனவே ஒரு பஸ் நிறுத்தப்பட்டது. இப்போது மற்றொரு பஸ்சும் நிறுத் தப்பட்டது.

காலையில் பஸ்சில் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் மாலையில் வீடு திரும்ப பஸ் வராத காரணத்தால் மாணவிகள் 4, 5 பேர் ஆட்டோவில் சென்றால் அதிக செலவு ஆகும் என்பதால், கும்பலாக ஆட்டோவில் ஏறிவிடுகின்றனர்.

ஆட்டோ டிரைவர்களோ அதிக அளவில் ஆட்டோவில் ஏற்றிச்சென்றால் போலீசார் கேஸ் போடு வார்கள் என்று மாணவிகளை கீழே இறக்கிவிட்டு ஓட்டம் பிடிக்கின்றனர். இதனால் பரிதவிக்கும் மாணவிகள் டூவீலரில் லிப்ட் கேட்டும், நடந்தும் 5 கி.மீ. செல்லவேண்டிய அவல நிலை காணப்படுகிறது.

இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகளிடம் கேட்டால் இனிமேல் நிறுத்தாமல் ரெகுலராக இயக்குவதற்கு ஏற்பாடு செய்கிறோம் என்று தெரிவித்தனர்.