ஆற்காடு வேதநிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சர். சி.வி.ராமன் அறிவியல் மன்றத் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளியின் இயக்குநர் மருத்துவர் எம்.விஜயராணி தலைமை வகித்தார். மருத்துவர் ராஜா சந்திரசேகர் பேசினார். இதில், மாணவர்கள் ஒ.ஆர்.எஸ்.கரைசலை தயாரித்து காட்டினர். தொடர்ந்து, புலிகளின் முக்கியத்துவம் குறித்து மாணவர்கள் தங்கள் செயல் திட்டத்தின் மூலம் காட்சிப்படுத்தினர்.