Ranipet District No.1 in helping the differently abled

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதில் ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்தி முதலிடத்துக்கு முன்னேறுகிறது.

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவச்சான்றுடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது.

கடந்த ஒரு வருடமாக வாரந்தோறும் செவ்வாய்க் கிழமைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு. முகாம் நடந்து வருகிறது. இதுவரை சிறப்பு 44 முகாம்கள் நடந்துள்ளன.

இம்முகாம்களில் மருத்துவச் சான்றுடன் கூடிய 10 வயதுக்கு மேற்பட்ட 3ஆயிரத்து 821 மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது, 3ஆயிரத்து409 மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 1,650 மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை பதிவு செய்யப்பட்டுள்ளது.

628 மாற்றுத்திறனாளி களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான 55 நலத்திட்ட உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

2ஆயிரத்து 280 மாற்றத்திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உறுப்புகள் கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளை பாதுகாப்போருக்கும் தொழில் கடன், இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அரசின் முந்தைய புள்ளி விவரப்படி 14ஆயி ரத்து 750 மாற்றுத்திறனாளிகள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளனர். வாராந்திர சிறப்பு முகாம்கள் மூலம் 3ஆயிரத்து 821 மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டு பயனடைந்துள்ளனர். அதன்படி 18ஆயிரத்து 571 மாற்றுத்திறனாளிகள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு நலத்திட்டங்களை பெற தகுதி உடையவர்களாக கண்டறியப்பட்டு அவர்களுக்கான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

ராணிப்பேட்டை மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நல திட்ட செயல்பாடுகளில் மாநிலத்தில் முதலிடத்தை பெறும் வகையில் தொடர்ந்து செயல்படுகிறது.