ராணிப்பேட்டையில் நேற்று தனியார் பள்ளி வாகன ஆய்வுப்பணியை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் துவக்கினார். உடன் வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம் மற்றும் அலுவலர்கள்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டில் பள்ளிக்குழந்தைகளை அழைத்துவரும் வாகனங்களை இயக்கும் டிரைவர்களை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் பாராட் டினார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 400 க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள் இயங்குகின்றன. அவற்றை ஆண்டுதோறும் ஆய்வுக்குட்படுத்தி அனு மதிபெறுவது கட்டாயமாகும். பள்ளி வாகனங்களை போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வுசெய்யும் பணியை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் நேற்று துவக்கி வைத்து பேசினார்.

அவர் கூறுகையில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளுக்கு வாகனங்களில் அனுப்புகின்றனர்.
வாகனங்களை இயக்கும் டிரைவர், கண்டக்டர்கள் அக்குழந்தைகளுக்கு பொறுப்பு ஆவார்கள். உங்களை நம்பித்தான் பெற்றோர் குழந்தைகளை அனுப்புகின்றனர் என்பதை மறக்கக்கூடாது.

பள்ளி வாகனங்களை ஓட்டும்போது செல்போன் பேசிக்கொண்டோ, மனக் குழப்பத்திலோ, வேகமாகவோ இயக்கக்கூடாது. டிரைவர்கள் சாலை விதிகளை முறையாக பின்பற்றவேண்டும், தவறாமல் கண்பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். வாகனங்களில் ஏற்படும் சிறிய பிரச்சனையையும் உடனடியாக சரிசெய்து பின்னர் இயக்கவேண்டும்.

ஒவ்வொரு நிறுத்தத்திலும் மாணவர்களை ஏற்றும்போதும், இறக்கும்போதும் கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும். வாகனங்களை பின்புறம் இயக்கும்போது கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

கடந்த வருடம் பள்ளி வாகனங்கள் தொடர்பான அனைத்து விதிமுறைகளும் முறையாக பின்பற்றப்பட்டுள்ளன. எந்தவொரு புகார்களும் பள்ளிவாகனங்கள் தொடர்பாக பதிவாகவில்லை. எனவே, பள்ளிவாகன டிரைவர்கள், கண்டக்டர்களை பாராட்டுகிறேன், நடப்பாண்டிலும் பள்ளிவாகனங்களை சிறப்பாக இயக்க வேண்டும் என்றார். ஆய்வின் போது, ஆர்டிஓ பூங்கொடி, போக்குவரத்து அலுவலர். ராமலிங்கம், டிஎஸ்பி. பிரபு, போக்குவரத்து ஆய் வாளர்கள் செங்குட்டுவேல், சிவக்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் வடிவேல், தாசில்தார் ஆனந்தன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

குட் டச்.. பேட் டச்...நோ டச்.. Good Touch.. Bad Touch... No Touch 

பள்ளி வாகனங்களில் வரும் மாணவிகளை டிரைவர், கண்டக்டர்கள் தொடுவது கூடாது. இப் போதெல்லாம் குட் டச். பேட் டச்... என்றெல்லாம் கிடையாது. தொடவே கூடாது, நோ டச் என்பது தான் இப்போதைய விதிமுறை. அதேபோல், பெண் குழந்தைகளை பெற்றோரே பள்ளி வாகனங்களில் ஏற்றி இறக்க வலியுறுத்த வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார்.