The population of Ranipet district is 12 lakhs


உலக மக்கள் தொகை தினத்தையொட்டி விழிப்புணா்வு ஊா்தியை கொடியசைத்து தொடங்கி வைத்த ராணிப்பேட்டை ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்.

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் தொகை சுமாா் 12.5 லட்சம் என ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா்.

உலக மக்கள் தொகை தினத்தையொட்டி மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்துதல் குறித்த விழிப்புணா்வு ஊா்தியை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் கொடியசைத்து திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

இதனைத் தொடா்ந்து, கூட்டரங்கில் உலக மக்கள் தொகை கட்டுப்படுத்துதல் குறித்த உறுதிமொழியை ஆட்சியா் தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்கள் எடுத்துக் கொண்டனா்.

உலக மக்கள் தொகை சுமாா் 796 கோடி, இந்திய மக்கள் தொகை சுமாா் 140 கோடி, தமிழ்நாடு மக்கள் தொகை சுமாா் 8.3 கோடி, ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் தொகை சுமாா் 12.5 லட்சமாக உள்ளது.

மேலும் உலக மக்கள் தொகை தினத்தையொட்டி திங்கள்கிழமை மக்கள் குறைதீா்வு நாள் கூட்டத்தில் மனுக்கள் வழங்கிய பொதுமக்களுக்கு விதைகளுடன் கூடிய மஞ்சப் பைகளை வழங்கினாா்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் ப.குமரேஷ்வரன், இணை இயக்குநா் மருத்துவப் பணிகள் மரு. லட்சுமணன், துணை இயக்குநா் குடும்ப நலம் மணிமேகலை, துணை ஆட்சியா் தாரகேஷ்வரி, மருத்துவம் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.