சாதாரணமான அமாவாசையானது அனுஷம், விசாகம், சுவாதி நட்சத்திரங்களில் வருமானால் அப்போது செய்கிற சிரார்த்தம் ஒரு வருடத்துக்குரிய திருப்தியை உண்டாக்குகிறது.
திருவாதிரை, புனர்பூசம்,பூசம் நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று செய்யப்படும் பிதுர்தர்ப்பணம் பன்னிரெண்டு ஆண்டுகள் பிதுர்திருப்தி ஏற்படுத்தும்.
இந்த ஆண்டு அமாவாசை காலம், புனர்பூசம், பூசம் நட்சத்திர நேரத்தில் அமைந்துள்ளது.
எனவே இந்த ஆண்டு ஆடி அமாவாசை பித்ரு பூஜை 12 ஆண்டுகளுக்கு உரிய பலனைத்தரும்.
அவிட்டம், சதயம், பூரட்டாதி நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று செய்யப்படும் பித்ருபூஜையானது, பித்ருக்களுக்கு தேவர்களுக்கும் கிடைக்காத புண்ணிய காலத்தைத் தரும்.