கலவை அருகே விடுதலைச் சிறுத்தை கட்சியின் தொகுதிச்செயலாளர் சரமாரி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் அங்குள்ள வயல்வெளியில் வீசப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மலையூர் கிராமத்தில் பஜனை கோவில் தெருவில் வசித்து வருபவர் மாசிலாமணி. இவரது இளையமகன் பார்த்தசாரதி (வயது 35) விடுதலைச் சிறுத்தை கட்சியின் இளைஞர் எழுச்சி பேரவை ஆற்காடு தொகுதிச் செயலாளராக இருந்து வந்தார்.

படுகொலை 


இந்நிலையில் இன்று காலை மலையூரில் இருந்து செய்யாது வண்ணம் செல்லும் சாலையில் ஒரு வயல் வரப்புகளிலும் வெளியையொட்டி கை, கால்கள் வெட்டப்பட்டு படு கொலை செய்யப்பட்ட நிலையில் பார்த்த சாரதி பிணமாகக் கிடந்துள்ளார்.

இதனைபார்த்து அதிர்ச்சி யடைந்தவர்கள் உடனே இது குறித்து கலவை காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், பிரபாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தசாரதியின் உடலை ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இன்று காலை தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுச் சென்ற பார்த்த சாரதியை ஒரு மர்ம கும்பல் கொடூரமாக கொலை செய்து விட்டு வயல் உடலை வயல் வெளியோரம் வீசிச் சென்றுள்ளனர்.

கொலைக்கான காரணம் என்ன, பார்த்தசாரதியை கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.