உலகில் குரங்கம்மை 50 ஆண்டுகளாக உள்ளது. அந்த வைரஸ் குறித்து யாரும் அச்சமடைய வேண்டாம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
குரங்கு அம்மை பாதிப்பை சர்வதேச அவசர நெருக்கடியாக உலக சுகாதார அமைப்பு சனிக்கிழமை அறிவித்தது. இந்தியாவில் முதல்முறையாக கோளத்தில் கடந்த ஜூலை 14ஆம் நேதி குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்நிலையில் குரங்கு அம்மை வைரஸ் தொடர்பாக மகாராஷ்டிர மாநிலம் புணேயில் உள்ள தேசிய வைரஸ் ஆய்வு நிறுவன மூத்த விஞ்ஞானியும் மருத்துவருமான பிரக்யா யாதவ் கூறியுள்ளதாவது: மத்திய ஆப்பிரிக்காஇ மேற்கு ஆப்பிரிக்கா மரபணு தொகுப்புகளை கொண்டது குரங்கு அம்மை வைரஸ். தற் போது உலகின் பல்வேறு பகுதிகளுக்கு பரவி கவலைக்குரிய சூழலை ஏற்படுத்தியுள்ள குரங்கு அம்மை வைரஸ் மேற்கு ஆப்பிரிக்க வகையாகும். இது காங்கோ பேசின் வகையைவிட குறைந்த பாதிப்பு கொண்டது. தற்போது இந்நியாவில் கண்டறியப்பட்டுள்ள குரங்கு அம்மை வைரஸ் மேற்கு ஆப்பிரிக்க வகையைச் சேர்ந்தது என்று தெரிவித்துள்ளார். 

தொற்று நோய் நிபுணர் சந்திரகாந்த் லஹரியா கூறுகையில் :

இந்த "குரங்கு அம்மை புதிய வகையான வரஸ் அள்ள. அது உலகின் 50 ஆண்டுகளாக உள்ளது. இந்த லைாரஸ் பெரும்பாலும் மிதமான அளவில்தான் உடல் நலக்குறைவை ஏற்படுத்தும்.

குறைந்த அளவில்தான் பரவும். இந்த வைரஸ் கொரோனாவைப் போன்றது அல்ல. கொரோனா வைரஸ் சுவாசம் மூலம் பரவும். அந்த வைரசால் பாதிக்கப்பட்டாலும் பலருக்கு அறிகுறிகள் தென்படாது. ஆனால் குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் தென்படுவோருடன் மிக நெருக்கமாக இருந்தால்தான் அது மற்றவருக்குப் பரவும்.

தற்போது குரங்கு அம்மைக்கான தடுப்பூசி பரிந்துரைக் கப்படவில்லை. இருப்பினும் தடுப்பூசி உத்தியாக குரங்கு அம்மை நோயாளிகளுடன் இருந்தவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட பெரியம்மை தடுப்பூசிகளை செலுத்தி வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துதல் அந்த வைரசால் பாதிக்கப்படுவோரையும் அவர்களுடன் இருந்தவர்களையும் தனிமைப்படுத்துவது ஆகிய நடவடிக்கைகளால் குரங்கு அம்மையைத் திறம்பட கையாள முடியும் என்று தெரிவித்தார்.

தேசிய தடுப்பூசி தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் கரோனா பணிக்குழு தலைவர் என்.கே. அரோரா கூறுகையில் “குரங்கு அம்மை குறைந்த அளவில்தான் பரவும். அந்தத் வைரசால் பாதிக்கப்பட்டால் அரிதாகவே மரணம் ஏற்படும். எனவே அந்தத் வைரஸ் குறித்து அச்சமடையத் தேவையில்லை. ஆனால் குறைவான நோய் எதிர்ப்பாற்றல் கொண்டவர்கள் கவனமாக இருக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.