ஜிஎஸ்டி தொடர்பாக வெளியான தகவல் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரும் திங்கட்கிழமை நாளை மறுதினம் முதல் சில பொருட்களின் மீதான ஜிஎஸ்டி மேலும் அதிகரிக்கப்பட உள்ளது. அவை என்னென் என்பதை பார்க்கலாம்.
லீகல் மெட்ராலஜி சட்டத்தின்படி முன்கூட்டியே பேக்கிங் செய்யப்பட்ட, முன்கூட்டியே லேபிளிடப்பட்ட தயிர், லஸ்ஸி மற்றும் மோர், பால் போன்ற சில்லறை பொருட்களுக்கு ஜூலை 18 முதல் 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்.
காசோலைகளை வழங்குவதற்கு வங்கிகள் வசூலிக்கும் கட்டணத்திற்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும்.
மருத்துவமனையில் அறை வாடகை (ICU தவிர்த்து) 1 நோயாளிக்கு 1நாளைக்கு ரூ. 5000க்கு மேல் ITC இல்லாத அறைக்கு வசூலிக்கப்படும் தொகைக்கு 5 % வரி விதிக்கப்படும்.
அட்லஸ்கள் உள்ளிட்ட வரைபடங்கள் ( Maps ) ஜூலை 18 முதல் 12 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும்.
ஹோட்டல் அறைகளை 12 சதவீத ஜிஎஸ்டிக்கு கீழ் ஒரு நாளைக்கு ரூ.1,000க்குள் கொண்டு வரவும் ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்துள்ளது.
கத்திரிக்கோல் போன்ற தையல் சார்ந்த பொருட்கள் மற்றும் பென்சில், ஷார்பனர்கள் போன்ற ஸ்டேஷனரி பொருட்கள், பிளேடுகள், ஸ்பூன்கள், ஃபோர்க்ஸ் போன்ற சில்வர் பொருட்கள், லேடில்ஸ் ஸ்கிம்மர்கள், கேக்- போன்ற நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கு 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர வாய்ப்புள்ளது.