விஐடி பல்கலைக் கழகத்தில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு சர்வதேச முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

இதில், இரு மாணவர்களுக்கு ஆண்டு ஊதியம் ரூ.1 கோடியே 2 லட்சத்துக்கு பணி வழங்கப்பட்டிருப்பதாக விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தெரிவித்தார்.

Employment for VIT students in leading international companies Jobs for two students at a salary of Rs.1 croreவிஐடி பல்கலைக்கழகத்தில் 2023-ஆம் கல்வியாண்டின் வேலை வாய்ப்பு முகாம் கடந்த 12-ஆம் தேதி தொடங்கியது.

இந்தப் பல்கலைக்கழகத்தின் வேலூர், சென்னை, அமராவதி (ஆந்திரம்),போபால்(மத்திய பிரதேசம்) மாணவ, மாணவிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த முகாம் நடத்தப்பட்டது.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் சர்வதேச பெரு நிறுவனங்களான மைக்ரோசாஃப்ட், டி.இ.ஷா, மோர்கன் ஸ்டான்லி, ஏர்.பி.என்.பி., மீடியா, நெட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் பங்குபெற்றன.

இதில், முதல்கட்டமாக நிறுவனம் குறித்த தகவல்கள், வேலைக்குத் தேவைப்படும் திறன்கள், மாணவ, மாணவிகளுக்கு தேவையான மனித வளப்பயிற்சி நேரடியாகவும், இணையம் மூலமாகவும் தேர்வுகள் நடைபெற்றன. முதற்கட்ட தேர்வு முடிவுகளை விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.

அதனடிப்படையில், சர்வதேச தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 45 மாணவ, மாணவிகளை தேர்வு செய்துள்ளது. இதேபோல் டி.இ.ஷா 2, பிடி லிடி முதலீடு நிறுவனம் 24, ஜே.பி. மோர்கன் 82, வெல்ஸ் பார்கோ 8, இன்போசிஸ் 7, திமேத் 32, ஸ்னைடர் எலக்ட்ரிக் 7 உள்ளிட்ட நிறுவனங்களும் மாணவ, மாணவிகளுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளன.

இதில், மோட்டார்க்யூ என்ற நிறுவனம் அமித் அகர்வால், ஷ்ரதக்பரத் வாஜ் ஆகிய இரு மாணவர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.1 கோடியே 2 லட்சம் சம்பளத்தில் வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது.

இதன்தொடர்ச்சியாக, அமேசான், டெக்சஸ், இன்ஸ்ட்ரூமென்ட், வால்மார்ட், லேப்ஸ் போன்ற பெரு நிறுவனங்களும் வேலைவாய்ப்பு முகாமில் பங்குபெற உள்ளன. 184 மாணவ, மாணவிகளுக்கு நிறுவனத்தில் தொழில் பயிற்சி பெறும்போதே வேலைவாய்ப்புக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

அந்த வகையில், ஆண்டுக்கு 10 லட்சத்துக்கும் மேல் சம்பளம் உள்ள வேலைவாய்ப்புகள் 175 மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் மாதம் முழுவதும் 10 லட்சத்துக்கும் மேல் சம்பளம் வழங்கும் நிறுவனங்களின் வேலை வாய்ப்பு முகாம்கள் தொடர்ந்து நடைபெறும். இதில், ஷெல், ஆரக்கள், பிலிப்கார்ட், மேக்மை ட்ரிப், நீல்சன் சாப்ட் லேப்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் பங்கு பெறுகின்றன.

நாட்டிலேயே முதன்முறையாக அமேசான் நிறுவனம் விஐடி மாணவ, மாணவிகள் 110 பேருக்கு தொழில் பயிற்சி வழங்கியுள்ளது. டி.சி.எஸ்.நிறுவனம் நடத்திய தேசிய தகுதித்தேர்வில் 4,630 மாணவ,மாணவிகள் தகுதி பெற்றுள்ளனர். இதுதவிர, முதுகலை படிப்புகளான எம். டெக்., எம்.சி.ஏ., மாணவ, மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் மார்ச் மாதம் தொடங்கியது. இதில் 88 பெருநிறுவன நிறுவனங்கள் பங் கேற்று 1,204 மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளன என்றார்.