குறள் : 826

நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்

மு.வ உரை :

நண்பர்போல் நன்மையானவற்றைச் சொன்னபோதிலும் பகைமை கொண்டவர் சொல்லும் சொற்களின் உண்மைத் தன்மை விரைவில் உணரப்படும்.

கலைஞர் உரை :

பகைவர், நண்பரைப்போல இனிமையாகப் பேசினாலும் அந்தச் சொற்களில் கிடக்கும் சிறுமைக் குணம் வெளிப்பட்டே தீரும்

சாலமன் பாப்பையா உரை :

நண்பர்களைப் போல், நன்மை தருவனவற்றைச் சொன்னாலும், நம்மோடு மனத்தால் கூடாதவர்களின் சொற்கள் நன்மை தராதனவே என்று விரைவில் அறிந்து கொள்ளலாம்.

Kural 826

Nattaarpol Nallavai Sollinum Ottaarsol
Ollai Unarap Patum

Explanation :

Though (one’s) foes may utter good things as though they were friends once will at once understand (their evil import).

Horoscope Today: Astrological prediction for July 30, 2022

இன்றைய ராசிப்பலன் - 30.07.2022 | Indraya Rasi Palan


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam


22, ஆடி 14, சனிக்கிழமை, துதியை திதி பின்இரவு 03.00 வரை பின்பு வளர்பிறை திரிதியை. ஆயில்யம் நட்சத்திரம் பகல் 12.12 வரை பின்பு மகம். மரணயோகம் பகல் 12.12 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. சந்திர தரிசனம். 

இராகு காலம் | Indraya Nalla neram 

காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

சூரிய உதயம் 6.2 கடக லக்கனம் இருப்பு நாழிகை 3 விநாடி 12

இன்றைய ராசிப்பலன் - 30.07.2022 | Today rasi palan - 30.07.2022

மேஷம்

இன்று குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பிள்ளைகள் வழியில் எதிர்பாராத விரயங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் சிறுசிறு வாக்குவாதங்கள் உண்டாகும். சிந்தித்து செயல்பட்டால் வீண் செலவுகளை தவிர்க்கலாம். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். வியாபார வளர்ச்சிக்காக கடன்கள் வாங்க நேரிடும். உடன் பிறந்தவர்களால் உங்கள் மனநிம்மதி குறையும். உறவினர்கள் வகையில் ஒருசில அனுகூலம் உண்டாகும். சிக்கனமுடன் செயல்பட்டால் பணபிரச்சினையை தவிர்க்கலாம்.

மிதுனம்

இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். வெளியூரிலிருந்து புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் தொழிலாளர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும்.

கடகம்

இன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வேலையில் ஏற்படும் பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வர்.

சிம்மம்

இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.

கன்னி

இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை நிலவும். தொழிலில் பணியாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் வரவிருக்கும் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு மகிழ்ச்சியை தரும்.

துலாம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உத்தியோகத்தில் இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் சற்று குறையும்.

விருச்சிகம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் ரீதியான வெளிவட்டார தொடர்புகளால் அனுகூலம் உண்டாகும். 

தனுசு

இன்று உங்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு பகல் 12.12 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் ஆரோக்கிய ரீதியாக செலவுகள் செய்ய நேரிடும். ஆகாரத்தில் கவனம் தேவை. எதிர்பார்த்த உதவிகள் மதியத்திற்கு பின் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும்.

மகரம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல் 12.12 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் இன்று முடிய வேண்டிய வேலைகளில் இழுபறி நிலை ஏற்பட்டு தாமதமாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

கும்பம்

இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பெண்கள் வழியில் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். சிலருக்கு பொன்பொருள் வாங்கும் யோகம் உண்டு.

மீனம்

இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும்.


கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001