குறள் : 820
எனைத்துங் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றிற் பழிப்பார் தொடர்பு
மு.வ உரை :
தனியே வீட்டில் உள்ளபோது பொருந்தியிருந்து பலர் கூடிய மன்றத்தில் பழித்து பேசுவோரின் நட்பை எவ்வளவு சிறிய அளவிலும் அணுகாமல் விட வேண்டும்.
கலைஞர் உரை :
தனியாகச் சிந்திக்கும் போத இனிமையாகப் பழகிவிட்டுப் பொது மன்றத்தில் பழித்துப் பேசுபவரின் நட்பு தம்மை அணுகாமல் விலக்கிக் கொள்ளப்படவேண்டும்
சாலமன் பாப்பையா உரை :
நம் வீட்டுக்குள் வந்து நட்புக் கொண்டாடிப் பலர் இருக்கும் சபையில் நம்மைப் பழிப்பவரின் தொடர்பைச் சிறிதளவும் சேரவிட வேண்டா.
Kural 820
Enaiththum Kurukudhal Ompal Manaikkezheei
Mandril Pazhippaar Thotarpu
Explanation :
Avoid even the least approach to a contraction of friendship with those who would love you in private but ridicule you in public.
Horoscope Today: Astrological prediction for July 24, 2022
இன்றைய ராசிப்பலன் - 24.07.2022 | Indraya Rasi Palan
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
இராகு காலம் | Indraya Nalla Neram
மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00.
சூரிய உதயம் 6.1 கடக லக்கனம் இருப்பு நாழிகை 4 விநாடி 16
இன்றைய ராசிப்பலன் - 24.07.2022 | Today rasi palan - 24.07.2022
மேஷம்
இன்று பிள்ளைகளின் தேவைக்காக சிறு தொகையை செலவிட நேரிடும். உறவினர்கள் வருகையால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண சிக்கலை தவிர்க்கலாம். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும். கொடுத்த கடன் வசூலாகும்.
ரிஷபம்
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷமான விஷயங்கள் நடைபெறும். சுப செலவுகள் ஏற்படும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். அனுபவம் உள்ளவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
மிதுனம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடன் பிறந்தவர்கள் வழியில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார வளர்ச்சிக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.
கடகம்
இன்று உங்களுக்கு ஆச்சிரியப்படுத்தகூடிய இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பெரியோர்களிடம் இருந்த மனஸ்தாபங்கள் மறையும். உடனிருப்பவர்களால் அனுகூலங்கள் உண்டாகும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமை நிலவும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வருமானம் பெருகும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
கன்னி
இன்று வீட்டில் மகிழ்ச்சி குறையும் சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படலாம். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையில்லாத பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
துலாம்
இன்று உங்களுக்கு மனகுழப்பம் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். சுப முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசுவதை தவிர்த்தால் பிரச்சினைகள் குறையும். உடல்நிலையில் கவனம் தேவை.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் இருந்த ஒற்றுமை குறைவுகள் விலகி மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். சுப முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும்.
தனுசு
இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் உண்டாகும்.
மகரம்
இன்று எதிர்பாராத செலவுகளால் பணநெருக்கடிகள் உண்டாகும். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். எடுத்த காரியம் வெற்றி பெற சற்று நிதானத்துடன் செயல்படுவது நல்லது. பெற்றோரின் நன்மதிப்பை பெறுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.
கும்பம்
இன்று பொருளாதார நிலை அவ்வளவு சிறப்பாக இருக்காது. குடும்பத்தில் வரவை விட செலவுகள் அதிகரிக்கும். ஆரோக்கியம் சீராக உணவு விஷயத்தில் கவனம் தேவை. திருமணம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது.
மீனம்
இன்று உங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். கடன்கள் விலகும். புதிய பொருள் வாங்குவீர்கள்.