குறள் : 813
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்
மு.வ உரை :
கிடைக்கும் பயனை அளந்து பார்க்கும் நண்பரும் அன்பைக் கொள்ளாமல் பெறுகின்ற பொருளைக் கொள்ளும் விலை மகளிரும் கள்வரும் ஒரு நிகரானவர்.
கலைஞர் உரை :
பயனை எண்ணிப்பார்த்து அதற்காகவே நட்புக் கொள்பவரும், விலைமகளிரும், கள்வரும் ஆகிய இந்த மூவரும் ஒரே மாதிரியானவர்களே ஆவார்கள்
சாலமன் பாப்பையா உரை :
இவரிடம் நட்புக் கொள்வதால் தமக்கு என்ன கிடைக்கும் என்று எண்ணிப் பார்ப்பவரின் நட்பும், தமக்குத் தரும் கூலியை ஏற்றுக் கொள்ளும் பாலியல் தொழிலாளரும் திருடர்களும் ஒருவருக்கொருவர் சமமானவர்களே.
Kural 813
Uruvadhu Seerdhookkum Natpum Peruvadhu
Kolvaarum Kalvarum Ner
Explanation :
Friendship who calculate the profits (of their friendship) prostitutes who are bent on obtaining their gains and thieves are (all) of the same character.
Horoscope Today: Astrological prediction for July 17, 2022
17-07-2022, ஆடி 01, ஞாயிற்றுக்கிழமை, சதுர்த்தி திதி பகல் 10.50 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. சதயம் நட்சத்திரம் பகல் 01.25 வரை பின்பு பூரட்டாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. ஆடிப் பண்டிகை.
இராகு காலம் | Indraya Nalla Neram
மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00.
சூரிய உதயம் 6.0 கடக லக்கனம் இருப்பு நாழிகை 5 விநாடி 30
இன்றைய ராசிப்பலன் - 17.07.2022 | Today rasi palan - 17.07.2022
மேஷம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றி கிட்டும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கைக்கு வந்து சேரும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு அமையும். வீட்டு தேவைகள் அனைத்தும் நிறைவேறும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த தேக்கங்கள் விலகி லாபங்கள் கிடைக்கும்.
மிதுனம்
இன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். திருமண முயற்சிகளில் தாமதங்கள் ஏற்படலாம். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் பெரியவர்கள் ஆறுதலாக இருப்பார்கள். வீட்டில் பெண்களின் பணிச்சுமை குறையும். மனநிம்மதி உண்டாகும்.
கடகம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். எதிலும் கவனம் தேவை.
சிம்மம்
இன்று எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிட்டும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
கன்னி
இன்று பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். உடல்நிலை சீராகும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
துலாம்
இன்று பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை, கை கால் அசதி உண்டாகும். புதிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. சகோதர சகோதரிகள் வழியில் சாதகமான பலன் கிட்டும். சிலருக்கு ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும்.
விருச்சிகம்
இன்று உடன் பிறந்தவர்கள் மூலமாக குடும்பத்தில் ஒற்றுமை குறையலாம். பிள்ளைகளால் எதிர்பாராத வீண் விரயங்கள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் ஓரளவு சாதகமான பலன்கள் கிடைக்கும். பணப் பிரச்சினைகள் சற்று குறையும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் கவனம் தேவை.
தனுசு
இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் தக்க நேரத்தில் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை கொடுக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் பிரச்சினை தீரும்.
மகரம்
இன்று குடும்பத்தில் வீண் செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் மனகஷ்டங்கள் உண்டாகலாம். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் உதவியால் தொழில் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும்.
கும்பம்
இன்று பணவரவு சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் செலவுகளை குறைத்து கொள்ள முடியும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் கிட்டும்.
மீனம்
இன்று எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். வயதில் மூத்தவர்களிடம் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது, எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. நண்பர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். கடன்கள் சற்று குறையும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001