ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கத்தில் அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட் டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் நேற்று நடந்தது. இதில், கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி பேசிய தாவது:
நாட்டின் 75வது சுதந்திர தின விழா வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. நாட்டின் சுதந்திர தினத்தை போற்றும் வகையில் தமிழக அரசு சார்பில் அமுதப் பெருவிழா கொண்டாடப் படுவதையொட்டி ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள் வரும் ஆகஸ்ட் 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை தங்களின் வீடுகளில் நமது இந்திய தேசியக் கொடியினை பறக்க வைக்க வேண்டும்.
இதற்கான பணியினை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஒன்றிணைந்து பொதுமக்களுக்கு விழிப் புணர்வினை ஏற்படுத்த வேண்டும். என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.