தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் தொகுதி 4க்கான போட்டி தேர்வு இம்மாதம் 24ம் தேதி நடைபெறு துகிறது.

இதற்கான மாதிரி தேர்வுகள் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறிவழி காட்டும் மையம் சார்பில் ஜூலை 9, 16ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

இந்த மாதிரி தேர்வு எழுதுவதற்கு விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவுசெய்து கொள்ள வேண்டும்.

மேலும் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில், டிஎன்பிஎஸ்சி தொகுதி 4க்கான போட்டித்தேர்விற்கு பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்பும் தேர்வர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்க வேண்டும்.

கெலெக்டர் பாஸ்கர பாண்டியன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.