கஞ்சா, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்குபவர்கள் மற்றும் அவரது உறவினர்கள் சொத்துக்கள் முடக்கப்படும் என்று அரக்கோணம் டிஎஸ்பி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் வேலூர் சரக டிஐஜி ஆனிவிஜயா தெரிவித்தார்.
அரக்கோணம் சப்டிவி ஷனில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து அடிக்கடி வேலூர் சரக டிஐஜி ஆனிவிஜயா ஆய்வு செய்து வருகிறார்.
நேற்று காலை அரக்கோணம் டிஎஸ்பி அலுவலகம், தாலுகா போலீஸ் ஸ்டே ஷனில் டிஐஜி திடீர் ஆய்வு செய்தார்.அங்கு நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும்,போக்குவரத்து போலீசாரின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும், டிரைவர்கள், மக்கள் சிரமமின்றி செல்ல போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய வேண்டும் என்றும், வேலூர் சரகத்தில் கஞ்சா விற்பனை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதை தடுக்க பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
கஞ்சா கடத்தல் வழக்கில் சிக்குபவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களின் சொத்துக்களையும் முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டு மென்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்."