கலவை அருகே உள்ள சென்னசமுத்திரம் பஜனைக்கோயில் தெருவை சேர்ந்தவர் மாலதி (32). இவர் மாங்காட்டில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

நேற்று காலை 8.40 மணியளவில் செய்யாறு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது பைக்கில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் மாலதி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கத் தாலி சரடை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டார்.

இதுபற்றி மாலதி ஆற்காடு தாலுகா போலீசில் புகார் செய்தார். எஸ்ஐ அசோக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.