ஆற்காடு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக ஆற்காடு தோப்புகானாவைச் சேர்ந்த பார்த்திபன் (25), மேட்டு தெருவைச் சேர்ந்த சதீஷ குமார் (27).  அதேதெரு வைச்சேர்ந்த பாலாஜி (28). ராமலிங்கம் டவுன் தெரு வைச் சேர்ந்த பழனி (32) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் பார்த்திபன், சதீஷ்குமார், பாலாஜி,பழனி ஆகியோரின் வங்கி கணக்குகளை போலீசார் நேற்று முடக்கியுள்ளனர். இதனால் அக்கணக்குகளில் பண பரிவர்த்தனை உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது