Pitru worship can be done at home on Adi Amavasi

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை 

என்கிறது திருக்குறள்
ஒரு மனிதன் தன் வாழ்வில் ஐந்து பேரைக் காக்க வேண்டும்.

தென்புலத்தார், தெய்வம், விருந்தினன், உறவினர்கள் மற்றும் தன் குடும்பம் ஆகிய ஐவரையும் காக்க வேண்டிய கடமை ஒரு மனிதனைச் சேர்கிறது. 

இந்த ஐவரில் முதலாவதாகத் திருவள்ளுவர் குறிப்பிடுவது தென்புலத்தார் எனப்படும் பித்ருக்களையே.

மாதம்தோறும் அமாவாசையில் பித்ருக்களை நினைத்துத் தர்ப்பணம் கொடுத்து படையல் இட்டு வணங்குவது மிகவும் சிறப்பானது. அவ்வாறு செய்ய இயலாதவர்கள் தவறாமல் ஆடி, புரட்டாசி, தை, மாசி ஆகிய அமாவாசைகளில் பித்ருவழிபாடு செய்வது அவசியம். இந்த நான்கு நாள்களிலும் செய்யும் பித்ரு வழிபாடு ஆண்டு முழுவதும் வழிபட்ட பலனைக் கொடுக்கும். அதிலும் குறிப்பாக ஆடி அமாவாசை மிகவும் சிறப்புடையது.  

 ஆடிமாத அமாவாசையன்றுதான் முன்னோர்கள், பித்ருலோகத்தில் இருந்து பூலோகம் வரப் புறப்படுகிறார்கள் என்கின்றன புராணங்கள். எனவே ஆடி அமாவாசையில் செய்யும் பித்ரு வழிபாடு அவர்களின் பூலோகப் பயணத்துக்கு ஒளி தருவது. அதன் பலனாக முன்னோர்கள் நமக்கு மனமார ஆசி வழங்குவார்கள் என்பது நம்பிக்கை. 

இந்த நாளில் நதி, குளம் அல்லது சமுத்திரம் போன்ற நீர் நிலைகளில் மூழ்கி நீராடிப் பித்ருக்களுக்குரிய தர்ப்பணம் செய்து பின் வீட்டுக்கு வந்து படையல் போட்டு வணங்குவது வழக்கம். 

வீட்டிலேயே பித்ரு பூஜை செய்யலாம். 


வீட்டிலேயே பித்ருக்களுக்கு எள்ளும் நீரும் கொண்டு தர்ப்பணம் கொடுப்பதுடன், காகத்துக்கு எள் கலந்த தயிர் சாதம் கொடுப்பது பித்ருக்களின் பரிபூரண ஆசிகளை நமக்கு பெற்றுத் தரும். 

 இந்து மதத்தை பொறுத்தவரை, முன்னோர்களின் ஆன்மாவானது புனித ஆத்மாவாக இருந்து தங்களது சந்ததிகளை காத்து ரட்சிக்கிறது என்பது நம்பிக்கை. அந்த வகையில் தினம் தோறும் பித்ருக்களை வணங்கும் சமயத்திலும், தர்ப்பணம் கொடுக்கும் சமயத்திலும் கூறவேண்டிய ஒரு அற்புதமான மந்திரம் உள்ளது. அந்த மந்திரத்தையும் அதற்கான பலனையும் கீழே பார்ப்போம் வாருங்கள். 

பித்ரு ஸ்துதி 


ஓம் நம : பித்ரே ஜன்ம தாத்ரே ஸர்வ தேவ மயாய ச
ஸுகதாய பிரஸன்னாய ஸுப்ரீதாய மஹாத்மனே

ஸர்வ யக்ஞ ஸ்வரூபாய ஸ்வர்காய பரமேஷ்டினே
ஸர்வ தீர்த்தாவலோகாய கருணா ஸாகராய ச

நம: ஸதா ஆஸு தோஷாய சிவ ரூபாய தே நம:
ஸதா அபராத க்ஷமினே ஸுகாய ஸுகதாய ச 

துர்லபம் மானுஷமிதம் யேன லப்தம் மயா வபு: 
ஸம்பாவனீயம் தர்மார்த்தே தஸ்மை பித்ரே நமோ நம:

தீர்த்த ஸ்நான தபோ ஹோம ஜபாதி யஸ்ய தர்சனம்
மஹா குரோஸ்ச குரவே தஸ்மை பித்ரே நமோ நம:

யஸ்ய ப்ரணாம ஸ்தவனாத் கோடிஸ: பித்ரு தர்ப்பணம்
அஸ்வ மேத சதை ஸ்துல்யம் தஸ்மை பித்ரே நமோ நம: 

பொது_பொருள்:


சொர்க்கத்தில் புனித ஆத்மாக்களாக இருக்கும் எங்கள் மூதாதையர்களே, கடல் போன்ற கருணை கொண்டவர்களே, நாங்கள் ஏதேனும் தவறுகளை செய்தால் அதை பொறுத்துக்கொண்டு எப்போதும் எங்களை காத்து ரட்சிப்பவர்களே, குருவுக்கெல்லாம் குருவானவர்களே உங்களுக்கு தர்ப்பணம் செய்ய நான் எப்போதும் கடமைபட்டுளேன்.