Old man dies after being hit by a lorry in Kaveripakkam
காவேரிபாக்கத்தில் லாரி மோதியதில் பலத்த காயமடைந்த முதியவர் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லும் வழியில் உயிரிழந்தார்.
காவேரிபாக்கத்தை அடுத்த கொண்டாபுரத்தைச் சேர்ந்தவர் மணி(64), விவசாயி. திங்கள்கிழமை இவர் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காவேரிபாக்கம் காவல் நிலையம் எதிரே நடந்து கடந்துள்ளார். அப்போது பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற லாரி மோதியதில் மணி பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவரை வாலாஜா அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து காவேரிபாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநர் முரளி(36)யை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.