குறள் : 822

இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்

மனம்போல வேறு படும்


மு.வ உரை :

இனம் போலவே இருந்து உண்மையில் இனம் அல்லாதவரின் நட்பு பொதுமகளிரின் மனம் போல உள்ளொன்று புறமொன்றாக வேறுபட்டு நிற்கும்.


கலைஞர் உரை :

உற்றாராக இல்லாமல் உற்றார்போல நடிப்பவர்களின் நட்பு, மகளிருக்குரிய நற்பண்பு இல்லாமல் அப்பண்பு உள்ளவர் போல நடிக்கும் விலை மகளிரின் மனம்போல உள்ளொன்றும் புறமொன்றுமாக இருக்கும்


சாலமன் பாப்பையா உரை :

வேண்டியவர் போலத் தோன்றி, மனத்தால் வேண்டாதவராக இருப்பவரோடு உண்டான நட்பு பாலியல் தொழிலாளர் மனம் போல வேறுபடும்.


Kural 822

Inampondru Inamallaar Kenmai Makalir

Manampola Veru Patum


Explanation :

The friendship of those who seem to be friends while they are not will change like the love of women.

Horoscope Today: Astrological prediction for July 26, 2022


இன்றைய ராசிப்பலன் - 26.07.2022 | Indraya Rasi Palan


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam


26-07-2022, ஆடி 10, செவ்வாய்க்கிழமை, திரியோதசி திதி மாலை 06.47 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. திருவாதிரை நட்சத்திரம் பின்இரவு 04.09 வரை பின்பு புனர்பூசம். மரணயோகம் பின்இரவு 04.09 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. மாத சிவராத்திரி. பிரதோஷ விரதம். சிவன் - முருக வழிபாடு நல்லது. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

இராகு காலம் | Indraya Nalla Neram

மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

சூரிய உதயம் 6.2 கடக லக்கனம் இருப்பு நாழிகை 3 விநாடி 54

இன்றைய ராசிப்பலன் - 26.07.2022 | Today rasi palan - 26.07.2022


மேஷம்

இன்று ஆனந்தமான செய்திகள் வீடு தேடி வரும். பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். தொழில் முன்னேற்றத்திற்கான முயற்சிகள் அனைத்திற்கும் நற்பலன் கிடைக்கும். வருமானம் இரட்டிப்பாகும். 

ரிஷபம்

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் அதிகரிக்கும். குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபார ரீதியாக கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். பொன் பொருள் சேரும்.

மிதுனம்

இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் குறையும்.

கடகம்

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் அதிகரிக்கும். குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபார ரீதியாக கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பொன் பொருள் சேரும்.

சிம்மம்

இன்று உறவினர்கள் வகையில் உள்ளம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் பெருமை படும்படி நடந்து கொள்வார்கள். பூர்வீக சொத்துகளால் நற்பலன்கள் உண்டாகும். சுப செலவுகள் செய்வீர்கள். புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வு கிட்டும்.

கன்னி

இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் கூடும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும்.

துலாம்

இன்று குடும்பத்தில் அமைதி குறையும். உறவினர்களால் வீண் செலவுகள் அதிகமாகும். உத்தியோகத்தில் வேலைபளு கூடும். எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். பயணங்களால் உடல் சோர்வு ஏற்பட்டாலும் அதன் மூலம் ஒருசில ஆதாயம் கிடைக்கும். 

விருச்சிகம்

இன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். சுபகாரிய முயற்சிகளை தள்ளி வைப்பது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. 

தனுசு

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைக்கேற்ற புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

மகரம்

இன்று உங்களுக்கு வியாபாரத்தில் அமோகமான லாபம் கிட்டும். புதிய தொழில் தொடங்குவதற்கான பேச்சு வார்த்தைகள் அனுகூலப் பலனை தரும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். 

கும்பம்

இன்று எதிர்பாராத செலவுகளால் பணநெருக்கடிகள் உண்டாகும். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். எடுத்த காரியம் வெற்றி பெற சற்று நிதானத்துடன் செயல்படுவது நல்லது. பெற்றோரின் நன்மதிப்பை பெறுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.

மீனம்

இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படலாம். உறவினர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் முன்னேற்றத்தை காணலாம்.


கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001