குறள் : 816
பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும்
மு.வ உரை :
அறிவில்லாதவனுடைய மிகப் பொருந்திய நட்பை விட அறிவுடையவரின் நட்பில்லாத தன்மை கோடி மடங்கு நன்மை தருவதாகும்.
கலைஞர் உரை :
அறிவில்லாதவனிடம் நெருங்கிய நட்புக் கொண்டிருப்பதை விட, அறிவுடைய ஒருவரிடம் பகை கொண்டிருப்பது கோடி மடங்கு மேலானதாகும்
சாலமன் பாப்பையா உரை :
அறிவற்றவனின் மிக நெருக்கமான நட்பைக் காட்டிலும் அறிவுடையார்களின் பகை, கோடி நன்மையாம்.
Kural 816
Pedhai Perungezheei Natpin Arivutaiyaar
Edhinmai Koti Urum
Explanation :
The hatred of the wise is ten-million times more profitable than the excessive intimacy of the fool.
Horoscope Today: Astrological prediction for July 20, 2022
இன்றைய ராசிப்பலன் - 20.07.2022 | Indraya Rasi Palan
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
20-07-2022, ஆடி 04, புதன்கிழமை, சப்தமி திதி காலை 07.36 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. ரேவதி நட்சத்திரம் பகல் 12.50 வரை பின்பு அஸ்வினி. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. பைரவர் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் | Indraya Nalla Neram
மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
சூரிய உதயம் 6.1 கடக லக்கனம் இருப்பு நாழிகை 4 விநாடி 58
இன்றைய ராசிப்பலன் - 20.07.2022 | Today rasi palan - 20.07.2022
மேஷம்
இன்று உத்தியோகஸ்தர்கள் பணிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் பிள்ளைகள் மூலம் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெண்களின் நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்
இன்று வியாபாரம் சிறப்பாக நடைபெறும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். வங்கி மூலம் உதவி கிடைக்கும்.
மிதுனம்
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடன் பிரச்சினைகள் குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.
கடகம்
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். செய்யும் செயல்களில் ஆர்வமின்றி ஈடுபடுவீர்கள். உறவினர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காணலாம். நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். கடன்கள் ஓரளவு குறையும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் வழியில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உங்கள் ராசிக்கு பகல் 12.50 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தூர பயணங்களை தவிர்க்கவும்.
கன்னி
இன்று உங்கள் ராசிக்கு பகல் 12.50 மணி முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் கால தாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
துலாம்
இன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். வெளி வட்டார நட்பு சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். வருமானம் பெருகும்.
விருச்சிகம்
இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடியால் கடன் வாங்க நேரிடும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடையலாம். எதிர்பாராத உதவி கிட்டும்.
தனுசு
இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்தால் மட்டுமே வெற்றி காண முடியும். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். தொழிலில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.
மகரம்
இன்று உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத வகையில் தனவரவு கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். உத்தியோகத்தில் மேன்மைகள் ஏற்படும். சேமிப்பு உயரும்.
கும்பம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் வீண் அலைச்சல்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்பு ஏற்படும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி அனுகூலமான பலன்கள் கிடைக்கப் பெறும்.
மீனம்
இன்று மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர் கொள்வீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். வேலையில் பல புதிய மாற்றங்களால் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்திற்கான வங்கி கடன் எளிதில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். புத்திர வழியில் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001