குறள் : 798

உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு

மு.வ உரை :

ஊக்கம் குறைவதற்குக் காரணமான செயல்களை எண்ணாமலிருக்க வேண்டும் அதுபோல் துன்பம் வந்த போது கைவிடுகின்றவரின் நட்பைக் கொள்ளாதிருக்க வேண்டும்.

கலைஞர் உரை :

ஊக்கத்தைச் சிதைக்கக்கூடிய செயல்களையும், துன்பம் வரும்போது விலகிவிடக்கூடிய நண்பர்களையும் நினைத்துப் பார்ககாமலே இருந்து விட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை :

உற்சாகம் குறைவதற்கான செயல்களை எண்ண வேண்டா; நம் துன்பக் காலத்தில் நம்மைக் கைவிட்டு விடுபவரின் நட்பைக் கொள்ள வேண்டா.

Kural 798

Ullarka Ullam Sirukuva Kollarka
Allarkan Aatraruppaar Natpu

Explanation :

Do not think of things that discourage your mind nor contract friendship with those who would forsake you in adversity.

Horoscope Today: Astrological prediction for July 02, 2022

இன்றைய ராசிப்பலன் - 02.07.2022 | Indraya Rasi Palan

இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

02-07-2022, ஆனி 18, சனிக்கிழமை, திரிதியை திதி பகல் 03.17 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. நாள் முழுவதும் ஆயில்யம் நட்சத்திரம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. நவகிரக வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

இராகு காலம் | Indraya Nalla Neram

காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

இன்றைய ராசிப்பலன் - 02.07.2022 | Today rasi palan - 02.07.2022


மேஷம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பெற்றோருடன் மனஸ்தாபம் உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமையாக இருக்கலாம். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வியாபாரத்தில் முன்னேற்றம் காணலாம்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு இன்று அனு-கூலமான பலன் உண்டாகும். பணப் பிரச்சினைகள் குறையும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். வெளியூர் பயணங்களால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிட்டும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் வருமானம் பெருகும்.

கடகம்

இன்று வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். புத்திர வழியில் அனுகூலம் கிட்டும். பொன் பொருள் சேரும். பழைய கடன்களை பைசல் செய்ய முடியும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத விரயங்கள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். சுபகாரியங்கள் கைகூடும்.

கன்னி

இன்று உங்களுக்கு குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் படிப்பில் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். சொத்து சம்மந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு ஏற்படும். தொழிலில் இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். 

துலாம்

இன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்கள் வழியாக மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். நீங்கள் எதிர்பார்த்த உதவி இன்று உங்களுக்கு கிடைக்கும். ஒரு சிலருக்கு வெளி மாநிலங்களில் பணிபுரியும் வாய்ப்பு கிட்டும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.

விருச்சிகம்

இன்று உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பயணங்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். மன அமைதி குறையும். வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப்பலனை அடையலாம். நண்பர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும்.

தனுசு

இன்று எந்த ஒரு செயலிலும் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வண்டி, வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

மகரம்

இன்று உங்களுக்கு அதிகாலையிலே ஆனந்தமான செய்தி வந்து சேரும். திருமண சுப முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

கும்பம்

இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் சீராக அமையும். பணவரவு தாரளமாக இருக்கும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு தெம்பை கொடுக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் தொழிலில் நல்ல பலன் கிடைக்கும். 

மீனம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் செலவுகள் ஏற்படும். செய்யும் செயல்களில் தாமத நிலை உண்டாகும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் நிதானம் தேவை. சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.




கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001