Grievance meeting of farmers in Ranipet district (July 29).
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் 29-இல் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு... ஜூலை 2022-ஆம் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூலை 29) காலை 10.30 மணியளவில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந் துள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
கூட்டத்தில், வேளாண்மைத் துறை, தோட்டக் கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை, பட்டு வளர்ச்சித் துறை, மீன்வளத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், கூட்டுறவுத் துறை, நீர்வள ஆதார அமைப்பு, வனத் துறை, மாசுக்கட்டுபாடு வாரியம், மின்சாரத் துறை, போக்குவரத்துத் துறை, பால்வளத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு, விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.
எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் களப் பிரச்னைகளை களைந்திட இக்கூட்டத்தில் கலந்துகொண்டு, பொதுப் பிரச்னைகளை கோரிக்கை வாயிலாகவும், தனிநபர் பிரச்னைகளை மனுக்கள் வாயிலாகவும் தெரிவிக்கலாம்.