Darshanam in Tirupati Special ticket release for senior citizens today
திருப்பதி - திருமலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் மாதம் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இலவச சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை 9 மணிக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் https://tirupatibalaji.ap.gov.in வெளியிடுகிறது. ஒரு நாளைக்கு 1000 டிக்கெட்கள்வழங்கப்பட உள்ளது.
இந்த டிக்கெட்களை முன்பதிவு செய்தவர்கள் தினந்தோறும் பிற்பகல் 3 மணிக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். எனவே மூத்தகுடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தீராத நோயால் பாதிக்கப் பட்டவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இலவச தரிசன சிறப்பு டிக்கெட்களை ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது.